தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த 24AM ஸ்டியோஸ் நிறுவனம், சிவகார்த்திகேயனை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் அறிவியல் தொழில்நுட்ப படம் ஒன்றை தயாரிக்க இருந்தது. ரவிக்குமார் இயக்க இருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதோடு, பல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்ற இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து பல மாதங்கள் ஆன பிறகும் படப்பிடிப்பு மட்டும் தொடங்கவில்லை. இதற்கிடையே சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க தொடங்கிய சிவகார்த்திகேயன், அப்படியே லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் ஒப்பந்தமானார். ஆனால், இப்படங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட ரவிக்குமாரின் படம் மட்டும் தொடங்கப்படாமல் இருப்பதோடு, படம் குறித்த எவ்வித அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.
மேலும், படத்தை தயாரிப்பதாக இருந்த 24AM நிறுவனத்தின் சென்னை அலுவலகம் காலி செய்யப்பட்டதாகவும், அதன் உரிமையாளரான ஆர்.டி.ராஜா எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் தகவல் வெளியானதோடு, கடன் தொல்லையால் அவர் தலைமறைவாகி விட்டதாகவும், இதனால் அவர் தயாரிப்பதாக இருந்த படங்கள் அனைத்தும் டிராப்பாகி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் சொந்தமாக படங்களை தயாரித்து வரும் சிவகார்த்திகேயன், ரவிக்குமார் இயக்க இருக்கும் பிரம்மாண்ட படத்தையும் தனது சொந்த நிறுவனத்திலேயே தயாரிக்க முடிவு செய்து, அப்படத்தை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
’கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஆகிய சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக தனது நிறுவனம் மூலம் பெரிய பட்ஜெட் படத்தை தயாரிக்க இருப்பதாகவும், இப்படம் தயாரிக்க எப்படியும் ரூ.50 கோடிக்கு மேல் பட்ஜெட் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...