விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘களவாணி’ படத்தின் அதே குழுவினர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘களவாணி 2’ மூலம் இணைந்திருக்கிறார்கள். எதார்த்தமான காதலை மையப்படுத்தி ‘களவாணி’ திரைக்கதையை அமைத்த இயக்குநர் சற்குணம் ‘களவாணி 2’ மூலம் உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.
உள்ளாட்சி தேர்தலின் முக்கியத்துவத்தை பற்றி பேசியிருக்கும் இப்படம், அதில் நடக்கும் மோசடிகள் குறித்தும் தைரியமாக பேசியிருக்கிறது.
படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்க, வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும், அவரது கதாபாத்திரமும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருக்கிறது.
ரெகுலரான வில்லனாக அல்லாமல் அமைதியாகவும், அளவான நடிப்பு மூலம் இயல்பான கிரமாத்து மக்கள் பலம் மிக்க அரசியல்வாதியாக வலம் வரும் துரை சுதாகர், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இவருக்கும், விமலுக்கும் இடையே நடக்கும் தேர்தல் யுத்தத்தில் யார் ஜெயிப்பார்கள்? என்பது படம் முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த, வில்லனாக இருந்தாலும், தேர்தலை நியாயமான முறையில் எதிர்கொள்ளும் துரை சுதாகரின் கதாபாத்திரம் மக்கள் மனதில் பதிந்துவிடுகிறது.
அதே சமயம், ஹீரோவாக இருந்தாலும் தேர்தலில் வெற்றி பெற விமல் செய்யும் களவாணி தனங்களால் அவர் மக்கள் மனதில் வில்லனாக பதிந்துவிடுகிறார்.
இறுதியில், தேர்தல் முடிவு வெளியான உடன், “அரசியல்ல களவாணி பன்றவங்களும், மோசடி செய்றவங்களும் தான் ஜெயிப்பாங்க போல” என்று கூறிக்கொண்டே துரை சுதாகர் செல்லும் போது ஒட்டு மொத்த திரையரங்கமே அவருக்கு கைதட்டுகிறார்கள்.
மொத்தத்தில், வில்லன் வேடத்தில் நடித்தாலும், படம் முடியும் போது மக்கள் மனதில் ஹீரோவாகும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், இயக்குநர் எழில் படத்திலும் முக்கியமான வேடத்தில் நடிப்பதோடு, மேலும் பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...