ஜூலை 12 ஆம் தேதி ரிலிஸாகும் ‘வெண்ணிலா கபடி குழு 2’
Monday July-08 2019

கபடி போட்டியை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘வெண்ணிலா கபடி குழு 2’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது.

 

இயக்குநர் சுசீந்திரனின் மூலக்கதையில், செல்வசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெண்ணிலா கபடி குழு 2’ படத்தை சாய் அற்புதம் சினிமாஸ் சார்பில் பூங்காவனன், ஆனந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

 

விக்ராந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக அர்த்தனா பினு நடித்திருக்கிறார். இவர்களுடன் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

இப்படத்திற்காக நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துக் கொண்ட நிஜ கபடி போட்டியை 8 நாட்கள் தொடர்ந்து நடத்தி படமாக்கியிருக்கிறார்கள்.

 

வரும் ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘வெண்ணிலா கபடி குழு 2’ முதல் பாகத்தை காட்டிலும் அதிகமாக ரசிகர்களை கவரும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related News

5229

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery