‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தொடர்ந்து ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’, ’சைத்தான்’, ‘எமன்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அதிலும் பிச்சைக்காரன் தமிழகத்தில் மட்டும் இன்றி ஆந்திராவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் காரணமாக தெலுங்கு சினிமாவிலும் தனது அனைத்து படங்களையும் வெளியிட விஜய் ஆண்டனி முடிவு செய்துள்ளார்.
அதன்படி தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாதுரை’ தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற தலைப்பில் வெளியாகிறது. இதன் பஸ்லுக் போஸ்டரை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அறிமுகப்படுத்தினார்.
இப்படி தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தாலும், விஜய் ஆண்டனியுடன் நடிக்கும் ஹீரோயின்கள் அனைவரும் அறிமுகம நடிகையாகவோ அல்லது பிரபலம் இல்லாத நடிகைகளாகவே இருக்கிறார்கள். இது குறித்து பல பேட்டிகளில் அவரிடம் கேட்டதற்கு, கதைக்கு என்ன தேவையோ அதற்கான ஹீரோயின் இருந்தால் போதும், என்று கூறிவந்தார். ஆனால், முன்னணி ஹீரோயின்களை விஜய் ஆண்டனி அனுகியதாகவும், யாரும் அவருடன் நடிக்க விரும்பவில்லை, என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதல் முறையாக முன்னணி ஹீரோயின் ஒருவருடன் விஜய் ஆண்டனி ஜோடி போட போகிறார். அந்த நடிகை அஞ்சலி. கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘காளி’ படத்தில் தான் அஞ்சலி விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
குடும்ப பிரச்சினை காரணமாக கோடம்பாக்கத்தில் இருந்து அந்திராவுக்கு எஸ்கேப்பான அஞ்சலி, தற்போது தமிழ்ப் படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...