நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டார்! - போலீஸ் அதிகாரின் அதிர்ச்சி தகவல்
Tuesday July-09 2019

கடந்த ஆண்டு உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, ஹோட்டல் அறையில் உயிரிழந்தார். அவரது மறைவு இந்திய திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, அவரது மரணத்திற்கு பல காரணங்களும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, திட்டமிட்ட படுகொலை, என்று கேரள டிஜிபி அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.

 

கேரள போலிஸின் மருத்துவ ஆலோசகராகவும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இவர் இறப்பதற்கு முன்பாக கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங்கிடம், ஸ்ரீதேவி மரணம் குறித்து பேசியுள்ளார்.

 

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய டிஜிபி ரிஷிராஜ் சிங், ”நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து சொன்ன தடயங்களை பார்க்கும் போது படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஶ்ரீதேவி அதிகமாக குடித்துவிட்டு குளியல் அறையில் மூழ்கிவிட்டார் என்பது அபத்தம். அப்படியே அதிகமாக குடித்திருந்தாலும் 1 அடி தண்ணீரில் ஒருவர் மூழ்க முடியாது.

 

அவரது தலையை பிடித்து யாரேனும் அழுத்தினால் தான் மரணிக்க முடியும் என்பது உமாடாதனின் கருத்து.” என்று தெரிவித்துள்ளார்.

 

கேரள டிஜிபி-யின் இந்த தகவலால் பாலிவுட் சினிமா மட்டு இன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

5233

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery