ஹீரோக்களுடன் டூயட் பாடி வந்த பல முன்னணி ஹீரோயின்கள் ஹீரோக்கள் போல வலம் வர வேண்டும் என்ற முடிவில் அப்படிப்பட்ட கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். நயன்தாரா போட்ட இந்த பாதையில், தற்போது திரிஷா, சமந்தா, அமலா பால் என பல நடிகைகள் பயணிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
இப்படி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பதில் திரிஷா பேரார்வம் காட்டினாலும், அவர் நடித்த இரண்டு படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால், சற்று அப்செட்டாகியிருக்கிறார். அவரது அப்செட்டை அப்புறப்படுத்தி, அவரடு வாழ்க்கையையே மாற்றப் போகும் விதத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கிறது ‘கர்ஜனை’.
திரிஷாவின் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் திரிஷா, ஹீரோயினாக அல்லாமல், ஆக்ஷன் ஹீரோவாக படம் முழுவதும் காட்டியிருக்கும் அதிரடி, ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் அம்ஷங்களாக இருக்கிறதாம்.
இப்படம் குறித்து இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், “செய்யாத தவறுக்கான பழி நம்மீது விழுந்தால் நமக்கு கோபம் வருமல்லவா. அந்தக் கோபம் தான் கர்ஜனை. செய்யாத தப்பிற்கு திரிஷாவின் காதலர் மேல் பழி வர அவர் ஒரு பிரச்சனையில் மாட்டுகிறார். அதில் இருந்து அவரை மீட்டு வரப்போராடும் திரிஷா அந்தப் பிரச்சனையில் ஒரு இழப்பைச் சந்திக்கிறார். பின் கர்ஜித்து அவர் வில்லன் கூட்டத்தை பழிக்குப்பழி வாங்குவது தான் படத்தின் சாராம்சம். பெரிய ஹீரோக்கள் பெரிய இயக்குநர்கள் படங்களில் நடித்து வரும் திரிஷா என் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததிற்கு காரணம் படத்தின் கதைதான். செய்யாத தவற்றால் ஒரு இழப்பைச் சந்திக்கும் அவர் பழிக்குபழி வாங்குவதிலும் ஒரு நியாயம் இருக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நினைத்தே திரிஷா நடித்துள்ளார். நிச்சயம் திரிஷா கரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். படமும் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.
ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை SDC பிக்சர்ஸ் வெளியீடுகிறது. அம்ரீஸ் இசை அமைக்க சிட்டிபாபு.கே ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், நடனத்தை நோபால் அவர்களும் அமைத்துள்ளனர். விவேகா, கருணாகரன், சொற்போ பாடல்களை எழுத சரவணன் ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்துள்ளார்.
தமிழ்சினிமாவில் தனது திறமையான நடிப்பால் பதினைந்து ஆண்டுகளாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை திரிஷா. அவர் கதையின் நாயகியாக நடித்துள்ளதால் கர்ஜனை எதிர்பார்ப்புள்ள படமாகியுள்ளது. இப்படத்தில் திரிஷாவோடு வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, ஸ்ரீரஞ்சனி, தவசி, அமித்பார்கவ், சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா உள்பட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...