’ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ், ஆல்யா மானசா, சீரியலில் ஜோடி போட்டதுடன் நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகினர். இவர்கள் இருவரும் காதலிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்து, ராஜா ராணியில் இவர்களுக்கான கெமிஸ்ட்ரி சூடி பிடிக்க ஆரம்பித்தது.
இதனால், சீரியலும் நல்ல வரவேற்பு ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த சீரியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க டிவி நிர்வாகும் முடிவு செய்துள்ளது.
நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும் டிவி சீரியலை திடீரென்று முடித்துக்கொள்ளும் சேனல் நிர்வாகத்தின் முடிவால் ஒட்டு மொத்த ‘ராஜா ராணி’ குழுவிம் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், ’ராஜா ராணி’
சீர்யல் முடியப் போவதால் சஞ்வீவ், ஆல்யா மானசா ஜோடி சீரியலில் பிரியும் தகவல் ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்திருக்கிறது.
அதே சமயம், சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடியை வைத்து ‘ராஜா ராணி’ சீரியலின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவும் சேனல் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ‘ராஜா ராணி’ சீரியலில் கணவன் - மனைவியாக இருந்துக் கொண்டு காதலித்து வரும் சஞ்வீவ் - ஆல்யா மானசா ஜோடியை இரண்டாம் பாகத்தில் காதலர்களாக காட்டுவதற்காவே சேனல் நிர்வாகம் இத்தகைய முடிவை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...