Latest News :

விஜய் டிவியின் கட்டுப்பாட்டல் அடிமையான பாத்திமா பாபு!
Wednesday July-10 2019

மக்களின் பேவரைட் டிவி நிகழ்ச்சியாகியிருக்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களின் எதிர்ப்பை அதிகமாக பெற்ற நிகழ்ச்சியாகவும் உள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிற்காக பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே நடக்கும் சண்டையும், அதில் பேசப்படும் வார்த்தைகளும் மிக மோசமாக இருப்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 

அதேபோல், பிக் பாஸ் முதல் சீசன் மற்றும் இரண்டாம் சீசனைக் காட்டிலும் மூன்றாம் சீசன் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னேறியிருப்பதாக விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இதற்கிடையே, பிக் போட்டியில் எலிமினேஷன் ரவுண்டுகள் தொடங்கியிருப்பதால் நிகழ்ச்சியின் விறுவிறுப்பு அதிகரித்துள்ளது. போட்டியின் முதல் எலிமினேஷனாக நடிகை பாத்திமா பாபு கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்பதிலும் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு, ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது வழக்கமான ஒன்று தான். இந்த பேட்டியை வைத்து பிக் பாஸ் பங்கேற்ற நடிகை ஆர்த்தி போன்றவர்கள் கல்லாகட்டியது நடந்தது. ஆனால், தற்போது அதுபோல கல்லாகட்ட முடியாத வகையில் விஜய் டிவி புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.

 

அதாவது, பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுபவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாதாம். விஜய் டிவி சார்பில் ஏற்பாடு செய்யப்படும் ஊடகங்களில் மட்டுமே பேட்டி கொடுக்க வேண்டுமாம். தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் நடிகை பாத்திமா பாபுவுக்கும் இதே நிலை தான். அவரிடம் பேட்டி என்று யாராவது, கேட்டால், விஜய் டிவியை கைகாட்டுகிறார். விஜய் டிவியில் கேட்டால், ”ஒரு நாளை நான்கு முதல் ஐந்து பேட்டி தான் கொடுப்பார், உங்களுக்கு சொல்கிறோம்” என்ற பதில் வருகிறது.

 

அதேபோல் பேட்டியில் எதை பேச வேண்டும், எதைப் பற்றி பேசக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளையும் விஜய் விடி போட்டியாளர்களுக்கு விதித்திருக்கிறதாம். வீட்டில் தான் சுதந்திரம் இல்லை, என்றால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் இப்படி அடிமையை போல நடத்துகிறார்களே, என்று தற்போது பாத்திமா பாபு வருந்துவதை போல, மற்ற பிக் பாஸ் போட்டியாளர்களும் நிச்சயம் வருந்துவார்கள், என்று பேட்டி எடுக்கும் ஊடகங்கள் பேசிக்கொள்கிறார்கள்.

Related News

5237

’சொட்ட சொட்ட நனையுது’ படம் உங்கள் மனதை மாற்றும் - நடிகர் நிஷாந்த் ரூஷோ நம்பிக்கை
Thursday August-07 2025

அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...

வெஸ்டர்ன் பாடலாக இருந்தாலும் அதில் மெலோடி இருந்தால் தான் ஹிட் ஆகும் - இசையமைப்பாளர் சபேஷ்
Thursday August-07 2025

ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

Recent Gallery