சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் குறும்படங்கள் மூலம் மிகப்பெரிய விஷயங்களையும், அதன் மூலம் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதை பல குறும்படங்கள் நிரூபித்து வருகின்றன. அதன் மூலம் குறும்படங்களுக்கு என்று தனி மரியாதை தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி, உலக திரையுலகிலும் ஏற்பட்டிருப்பதால், குறும்படங்களை பார்ப்பதில் தொடங்கி தயாரிப்பது, இயக்குவது, நடிப்பது என அனைவரிடமும் குறும்படங்கள் மீது மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், உள்ளூர் குறும்படங்கள் முதல் உலக குறும்படங்கள் வரை என சர்வதேச குறும்படங்களை இலவசமாக பார்க்க வேண்டுமா? என்று யாராவது உங்களிடம் கேட்டால், ”ஆம்” என்ற பதிலை தவிர வேறு எதையும், யாராலும் சொல்ல முடியாது.
ஆம், குறும்படங்களை பார்க்கவும், தங்களது குறும்படங்களை உலக அளவில் கொண்டு செல்லவும், ShortFlix என்ற புதிய தளம் வந்துவிட்டது.
திரைப்படங்களைப் பார்க்க எப்படி NetFlix உள்ளிட்ட பல தளங்கள் இருந்தாலும், குறும்படங்களுக்கான பிரத்யேகமான செயலியாக ShortFlix அறிமுகமாகியுள்ளது. Youtube-ல் சென்று குறும்படங்களை தேடி கண்டுப்பிடுத்து பார்ப்பதற்கு பதில் Shortflix செயலி மூலம் மிக எளிமையாக இருந்த இடத்திலிருந்தே தரமான குறும்படங்களை கைப்பேசி வாயிலாக கண்டு ரசிக்கலாம்.
குறும்பட இயக்குநர் அல்லது குழுவினர் அவர்களது படைப்புகளை Shortflix-ன் வலைதள முகவரியிலோ அல்லது நேரடியாகவோ சென்று சமர்ப்பிக்கலாம்.சமர்ப்பிக்கப்பட்ட குறும்படங்கள் தரமானதாக இருக்கும் பட்சத்தில் அவை Shortflix செயலியில் பதிவேற்றப்படும்.இதனுடன் Shortflix-ன் சொந்த தயாரிப்பில் உருவான குறும்படங்கள் Shortflix Originals என்ற பிரிவில் பதிவேற்றப்படும்.அவற்றையும் அனைவரும் கண்டு ரசிக்கலாம்.Shortflix செயலியில் பதிவேற்றப்பட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் உருவாக்கப்பட்ட குறும்படங்களிலிருந்து சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை Shortflix-ன் பிரிமியரில் பிரமாண்டமான வெள்ளித்திரையில் திரையிடப்படும்.
ShortFlix செயலியின் அறிமுக விழா மற்றும் முதல் பிரிமியர் கடந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் நடைபெற்றது. இதில் 5 சிறந்த தரமான குறும்படங்கள் திரையிடப்பட்டன. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சிறுத்தை சிவா, எஸ்.சரவணன் மற்றும் மாயாஜால் திரையரங்கின் மேலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Shortflix-ன் இரண்டாவது பிரிமியர் சமீபத்தில் ஜூன் மாதம் 18ஆம் தேதியன்று மாயாஜால் திரையரங்கில் நடைபெற்றது. இந்த முறையும் சிறந்த தரமான ஆறு குறும்படங்கள் திரையிடப்பட்டன. இவ்விழாவினை சிறப்பிக்க தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, இயக்குநர்கள் அமீர், விஜய் மில்டன், நடிகர் மனோஜ் கே.பாரதி மற்றம் PROநிகில் முருகன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
Shortflix செயலியை கீழ்கண்ட இணைப்பிற்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.shortflix
https://apps.apple.com/in/app/shortflix/id1448385291
உங்கள் குறும்படங்களை Shortflix செயலியில் பதிவேற்ற கீழ்கண்ட வலைதள முகவரியிலோ அல்லது கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
vvshortflix@gmail.com
info@shortflix.co.in
+91-9962052288
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...