விவாகரத்துக்கு பிறகு விஜே ரம்யா வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்! - அதிர்ச்சியில் கோலிவுட்
Thursday July-11 2019

மக்களின் பேவரைட் விஜே-க்களில் ஒருவராக திகழ்ந்த ரம்யா, தமிழ் திரையுலகிலும் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தார். சில திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்தவருக்கும், பல சினிமா வாய்ப்புகள் வந்தாலும் அதை தவிர்த்து வந்தார்.

 

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக பிஸியாக வலம் வந்த ரம்யா, கடந்த 2014 ஆம் ஆண்டு அபரஜீத் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், திருமணமான ஒரே ஆண்டில், அவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

விவாகரத்து பெற்ற ரம்யா, அதன் பிறகு நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதை குறைத்துக் கொள்வதோடு, விஜே பணியையும் படிபடியாக நிறுத்திக் கொண்டார். மாறாக பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு, அதில் பல பதக்கங்களையும் வென்றார். பிறகு சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்த தொடங்கியவர், அப்படியே தனது நிகழ்ச்சி தொகுப்பாளினி பணியையும் தொடங்கியுள்ளார்.

 

சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரம்யா, ஒரு படத்தில் சமுத்திரக்கனி ஜோடியாகவும் நடிக்கிறார். ஒரு காட்சி, இரண்டு காட்சி என்று வரும் படங்களை தவிர்த்து வருபவர், முக்கியமான கதாபாத்திரம் அல்லது ஹீரோயின் வேடம் கிடைத்தால் நடிக்கலாம், என்ற எண்ணத்தில் சினிமா பிரபலங்கள் பலருக்கு தனது விருப்பத்தை தெரியப்படுத்தி வருகிறார்.

 

இந்த நிலையில், அமலா பால் நடிக்கும் ‘ஆடை’ படத்தில் நடிக்கும் ரம்யாவும், அமலா பாலும் லிப் கிஸ் அடிக்கும் காட்சி டிரைலரிடம் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரைலரில் சில நொடிகள் வரும் இந்த காட்சி தற்போது வைரலாகியுள்ளதால், ரம்யா இதில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Ramya Aadai

 

திருமணத்திற்கு முன்பு தன்னை தேடி வந்த பல நல்ல சினிமா வாய்ப்புகளை நிராகரித்த ரம்யா, விவாகரத்துக்குப் பிறகு சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்துபவர், இப்படிப்பட்ட சர்ச்சையான வேடத்தில் நடிக்கும் அளவுக்கு அவரது நிலை வந்துவிட்டதே, என்பதை எண்ணி கோலிவுட்டினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

இருப்பினும், ஆடை படம் வெளியானால் ரம்யா பேசப்படுவார், என்று அப்படத்தின் நாயகி அமலா பால் பாராட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

5240

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery