எளிமையாக நடந்த இயக்குநர் விஜயின் இரண்டாவது திருமணம்!
Thursday July-11 2019

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விஜய், நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதும். இரண்டு ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்ததும் அனைவரும் அறிந்த ஒன்று தான். விவாகரத்துக்குப் பிறகு அமலா பால் நடிப்பில் கவனம் செலுத்த, விஜயுடம் தொடர்ந்து படங்கள் இயக்கி வந்தார்.

 

இயக்குநர் விஜயை நடிகை ஒருவருடன் சேர்த்து காதல் கிசு கிசுகள் வெளியானதோடு, அந்த நடிகைக்கு அவர் கார் வாங்கிக் கொடுத்ததாகவும், அவரையே விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கிசு கிசுகள் வெளியானது.

 

இதற்கிடையே, இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்த அவரது பெற்றோர், சென்னையை சேர்ந்த டாக்டர் ஐஸ்வர்யா என்பவருடன் விஜய்க்கு திருமணம் ஏற்பாடு செய்தனர். இது குறித்து விஜயும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஜூலை மாதம் என்று குறிப்பிட்டவர், தேதியை மட்டும் குறிப்பிடவில்லை.

 

இந்த நிலையில், இயக்குநர் விஜய் - டாக்டர் ஐஸ்வர்யா திருமணம் இன்று சென்னையில் மிக எளிமையாக நடந்து முடிந்திருக்கிறது. இதில் இரு வீட்டாரின் உறவினர்களும், சில முக்கிய சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர்.

 

 


Related News

5244

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery