நடிகைகளில் சிலர் சர்ச்சையான வேடங்களில் நடிப்பதோடு, பேட்டிகளிலும் சர்ச்சையாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். அதில் முக்கியமானவர் ராதிகா ஆப்தே.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தமிழில் ‘ஆல் இன் ஆல் ஆழகு ராஜா’, ‘தோனி’, ‘வெற்றிசெல்வன்’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும், ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நடித்த பிறகே தமிழகர்களிடம் பிரபலமானார்.
தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, நிர்வாணமாக நடிப்பது, படுக்கையறை காட்சிகளில் சர்வசாதாரணமாக நடிப்பது என்று பல துணிச்சலான வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு ஆண் வேண்டும், என்று அவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய ராதிகா ஆப்தே, ”ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை. தினமும் ஒவ்வொருவருடன் இருப்பது என்பது தினமும் மாறக் கூடிய விஷயம். அது கட்டாயமாக இருக்க வேண்டிய விஷயம் இல்லை. அப்படிப்பட்ட வாய்ப்பு ஒவ்வொரு நாளும் தனக்கு தேவைப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
பெனிடிக்ட் டெய்லர் என்ற வெளிநாட்டவரை திருமணம் செய்துக்கொண்டிருக்கும் ராதிகா ஆப்தே, கணவர் இருக்கும் போதே, இப்படி ஒவ்வொரு நாளும் ஒர் ஆண் தனக்கு தேவைப்படுகிறார், என்று கூறியிருப்பது பாலிவுட் சினிமாவில் மட்டும் இன்றி இந்திய சினிமாவையே அதிர வைத்திருக்கிறது.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...