மீம்ஸாக மாறிய ‘களவாணி 2’ ராவண்னாவின் வசனம்!
Saturday July-13 2019

திரைப்படங்களில் எதாவது ஒரு வசனம் பேமஸ் ஆகிவிட்டால், அதைவிட அதிகமாக பேமஸ் ஆக்குவது அந்த வசனத்தை தாங்கி வரும் மீம்ஸ்கள் தான். உதாரணத்திற்கு ‘என்.ஜி.கே’ படத்தில் ஹீரோ கீழே விழுந்த பன் குறித்து பேசிய வசனத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் வெளியிட்ட மீம்ஸ்கள் இந்திய அளவில் டிரெண்டானது. அந்த வரிசையில் தற்போது ‘களவாணி 2’ படத்தில் வில்லன் வேடமான ராவண்னா கதாபாத்திரம் பேசிய வசனம் ஒன்று மீம்ஸ் கிரியேட்டர்களால் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘களவாணி 2’ படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகராக ஓடிக்கொண்டிருப்பதோடு, படத்தில் அறிமுகமான நடிகர்களும் மக்களிடம் பிரபலமாகியுள்ளார்கள்.

 

அந்த வகையில், படத்தில் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ராஜேந்திரன் என்கிற ராவண்னா என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். இவரை எதிர்த்து தான் ஹீரோ விமல் ஊராட்சி தேர்தலில் போட்டியிடுவார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நீடிக்க, ஊரே ராவண்னாவின் பக்கம் இருக்கையில், விமலின் களவாணி தனத்தால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவார்.

 

கதாபாத்திரம் வில்லனாக இருந்தாலும், எந்தவித களவாணி தனமும் செய்யாமல் நேர்மையான முறையில் தேர்தலை எதிர்கொள்ளும் துரை சுதாகர், தனது தோல்வி முடிவு அறிவித்த பிறகு, அயோக்கிய பயலுவல்டயும், களவாணிப் பயலுவல்டயும் நல்லவங்க தோத்துப்போறதுதான் நம்ம நாட்டு அரசியலோட சாபக்கேடு” என்ற வசனம் பேசியபடியே நடந்து செல்வார்.

 

அவரது இந்த வசனம், வைரலாகி மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இதுவரை அரசியலில் தோற்றவர்கள் பயன்படுத்திய, ”தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தருமமே வெல்லும்” என்ற வசனம் தற்போது மாறி, துரை சுதாகர் பேசிய அரசியல் வசனங்கள் பிரபலமாகி அனைவராலும் பாராட்டப்படுகிறது.

Related News

5257

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery