பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியாகப் போவது இவர் தான்!
Sunday July-14 2019

பிக் பாஸ் சீசன் 3 யின் இரண்டாவது எலிமினேஷன் இன்று நடக்க உள்ளது. இதில் யார் வெளியேற்றப்பட போகிறார்கள் என்று ரசிகர்கள் பெரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

 

இதற்கிடையே, வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எவிக்‌ஷனை முன்கூட்டியே அதுவும், வித்தியாசமாக போட்டியாளரே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் நபரின் பெயரை கூறுவார் என்று கமல்ஹாசன் ட்விஸ்ட் வைத்தார். அதன்படி, சாண்டி கையில் எவிக்‌ஷன் கார்டு கொடுக்கப்பட்டது. அதில் இருந்த பெயர், நைனா என்று செல்லமாக அழைப்பெறும் மோகன் வைத்தியா. அதைப் பார்த்ததும், விளையாட்டில் அவுட்டான பச்சக்குழந்தை போல் மோகன் வைத்தியா தேம்பி தேம்பி அழுதுக் கொண்டு அனைத்து போட்டியாளர்களை கட்டிப்பிடித்து முத்தமிட்டு விடைபெற தயாரானார்.

 

சில நிமிட சோகம், அழுகை, முத்தங்களுக்கு இடையே, கமல்ஹாசன் இது Prank என்றும், இந்த வார நாமினேஷனில் இருந்து மோகன் வைத்தியா காப்பாற்றப்படுகிறார் என்பதையும் கூறினார்.

 

மோகன் வைத்தியாவை தவிர மற்றவர்கள் எலிமினேஷன் ஆபத்தில் இருக்க, பிக் பாஸ் வீட்டில் அதிரடி காட்டி வரும் வனிதா தான் இன்று வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

 

போட்டியை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் வனிதா முக்கிய பங்கி வகித்தாலும், அவரை தெலுங்கான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த இருப்பது உள்ளிட்ட சில பிரச்சினைகளாலும் அவரை பிக் பாஸ் வெளியேற்ற முடிவு செய்திருப்பதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related News

5258

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery