பிக் பாஸில் நடக்கும் முறைகேடு! - முன்னாள் போட்டியாளரின் விமர்சனத்தால் பரபரப்பு
Monday July-15 2019

இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழில் மூன்றாவது பாகம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது எலிமினேஷன் ரவுண்ட் தொடங்கப்பட்டு பாத்திமா பாபு, வனிதா என இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷனில் மிகப்பெரிய முறைகேடு நடப்பதாக, தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை டேனி, விமர்சித்துள்ளார். 

 

இது குறித்து கூறிய டேனி, ”போட்டியாளர்களை வெளியேற்றுவதற்காக நடத்தப்படும் வாக்கெடுப்பு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. பல குளறுபடிகள் நடக்கிறது. கடந்த முறை சென்ராயன் வெளியேற்றப்பட்ட போது பெரிய சந்தேகம் எழுந்தது. என் மனைவியே அவருக்கு அதிக ஆதரவு இருப்பதை உறுதி செய்யும் அளவுக்கு சில இணையதள வாக்கெடுப்புகளை காடினார். ஆனால், அவர் வெளியேற்றப்பட்டது எப்படி என சந்தேகம் எழுந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

 

Dani

 

டேனியின் இந்த விமர்சனத்தால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடம் இருந்த மவுசு குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதோடு, ஏற்கனவே நாடகம், ஏமாற்றுவேலை என்று சிலரால் விமர்சிக்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதில் கூட முறைகேடு நடப்பது, அந்நிகழ்ச்சியின் போட்டியாளர் மூலமாகவே தெரிய வந்திருப்பதால், பிக் பாஸ் வெறும் டிராமா என்று பேச்சு அடிபடுகிறது.

Related News

5259

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery