Latest News :

பா.ஜ.க-வுக்கு காலம் பதில் சொல்லும் - ராகவா லாரன்ஸ் அதிரடி
Monday September-11 2017

நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களை விமர்சிக்கும் பா.ஜ.க-வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகரும் இயக்குநருமான ராகவா லாயன்ஸ், பா.ஜ.க-வுக்கு காலம் பதில் சொல்லும், என்று கூறியுள்ளார்.

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது தாயுடன் இன்று காலை ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் அவருக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

 

கோவில் வளகாத்தில் இருந்த நிருபர்கள் அவரிடம் அனிதா தற்கொலை மற்றும் நீட் தேர்வு குறித்து கருத்து கேட்ட போது, ”‘நீட்’ தேர்வால் மருத்துவ இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் ஈடு செய்ய முடியாதது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ கூடாது.

 

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை பா.ஜ.க. விமர்சிக்கிறது. பா.ஜ.க.விற்கு காலம் பதில் சொல்லும்.” என்று தெரிவித்தார்.

 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கடைசி வரை கலந்துக் கொண்ட லாரன்ஸ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தனது சொந்த செலவில் உணவு உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்களை வழங்கியதோடு, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக கேக் ஒன்றை வெட்டி கின்னஸ் சாதனையையும் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

526

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery