மணிரத்னத்தின் ‘இருவர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், தொடர்ந்து ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ஜீன்ஸ்’, ‘ராவணன்’, ‘எந்திரன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர், 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சானை காதல் திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பவர், தற்போது முதல் முறையாக தெலுங்குப் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் தமிழ்ப் படத்தில் மட்டுமே நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய், முதல் முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக தெலுங்குப் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார். ’ராவோயி சண்டமாமா’ என்ற தெலுங்குப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்த ஐஸ்வர்யா ராய், ஹீரோயினாக தெலுங்கு சினிமாவில் களம் இறங்குவது இதுவே முதல் முறை என்பதால், இப்போதே இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் பணிகள் முடிவடைந்த உடன், இந்த புதிய படத்தின் பணிகள் தொடங்க உள்ளதாம்.
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
தலைப்பு மற்றும் டீசர் மூலம் கவனம் ஈர்த்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது...
பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்...