Latest News :

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற இவர் தான் காரணம்!
Monday July-15 2019

தமிழ் பிக் பாஸ் சீசன் 3 பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக வனிதா எலிமினேட் செய்யப்பட்டார். அவர் வெளியேற்றப்பட இருக்கும் தகவல் ஒரு நாள் முன்பே கசிந்தாலும், கடைசி நேரத்தில் பிக் பாஸ் அவரை வெளியேற்ற மாட்டார் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது. காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக நகர்த்துவதற்கான முக்கிய அம்ஷமாக வனிதா இருந்தார்.

 

ஆனால், வனிதாவின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமானதோடு, அவர் செய்வது அனைத்தும் போலியானதாக இருப்பது அப்பட்டமாக தெரிந்தது. இதனால், ஒட்டு மொத்த நிகழ்ச்சி மீதே ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், டி.ஆர்.பி குறையவும் தொடங்கியது. எனவே, அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட பிக் பாஸ் குழு, நிகழ்ச்சி பரபரப்பாக நகர்வதற்கான போட்டியாளர் ஒருவர் வேண்டும், அதே சமயம் அவர் வனிதாவாக இல்லாமல் வேறு ஒருவராக இருந்தால் நிகழ்ச்சியின் மீது ரசிகர்களுக்கு அதிகமாக ஈர்ப்பு ஏற்படும் என்று முடிவு செய்தார்கள்.

 

அதேபோல், தற்போது போட்டியாளர்களாக இருப்பவர்களை வனிதா போன்ற அடவாடி போட்டியாளராக மாற்றவும் அவர்களுக்கு விருப்பமில்லை. அதனால், புதிய போட்டியாளர் ஒருவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இறக்கிவிட முடிவு செய்தவர்கள், அதற்கு பதிலாக வனிதாவை வெளியேற்றவும் முடிவு செய்தார்கள். இதையடுத்து, வனிதாவுக்கு பதில் வேறு ஒரு போட்டியாளரை தேர்வு செய்து வந்த பிக் பாஸ் குழுவினருக்கு சிலர் நோ சொல்ல, இறுதியாக நடிகை விசித்ரா ஓகே சொல்லியிருக்கிறார்.

 

Actress Visithira

 

ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து கடுமையாக விமர்சித்த விசித்ராவை தற்போது பிக் பாஸ் குழுவினர் சமாதனப்படுத்தி போடிட்யாளராக்கியுள்ளது. விசித்ரா ஓகே சொன்ன பிறகே, வனிதாவை வீட்டை விட்டு காலி செய்திருக்கிறார்கள். ஒரு வேளை விசித்ரா ஓகே சொல்லவில்லை என்றால், வனிதாவை வீட்டுக்குள் வைத்துக் கொண்டு வேறு ஒருவரை பிக் பாஸ் வெளியேற்றியிருப்பார் என்றும் கூறப்படுகிறது.

 

எது எப்படியோ வனிதா வெளியேறுவதற்கு விசித்ராவும் ஒரு காரணமாகிவிட்டார்.

Related News

5263

“திரையுலகில் என் பெற்றோர் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான்” - ஆர்.கே.செல்வமணி நெகிழ்ச்சி
Saturday August-09 2025

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...

மிரட்டும் ‘குற்றம் புதிது’ டீசர்! - கவனம் ஈர்த்த அறிமுக நடிகர் தருண் விஜய்
Saturday August-09 2025

தலைப்பு மற்றும் டீசர் மூலம் கவனம் ஈர்த்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது...

இசைஞானியிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்
Saturday August-09 2025

பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை  பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்...

Recent Gallery