Latest News :

ஹீரோயின் ஆன பிக் பாஸ் லொஸ்லியா! - யாருக்கு ஜோடி தெரியுமா?
Monday July-15 2019

பிக் பாஸ் சீசன் 3 யின் மாஸ் போட்டியாளராக திகழ்பவர் லொஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் மற்றும் மாடலான இவர், ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவர் பிக் பாஸ் வீட்டில் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது, பட்டாம்பூச்சி பிடிப்பது உள்ளிட்ட பலவற்றை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

 

பிக் பாஸ் முதல் சீசனின் எப்படி ஓவியா ரசிகர்களின் மனதை கவர்ந்தாரோ அதைவிடவும் அதிகமாகவே லொஸ்லியா கவர்ந்துவிட்டார். ஏகப்பட்ட ஆர்மிகள் லொஸ்லியாவுக்காக ஆரம்பிக்கப்பட்டு அவர் புகழ் பாடி வருகிறார்கள்.

 

இந்த அளவுக்கு மக்களிடம் பிரபலமாகியுள்ள லொஸ்லியா, பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்த உடன் தமிழ் சினிமாவின் நிச்சயம் ஹீரோயின் ஆவார், என்று கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரை ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் படத்தில் லொஸ்லியா ஹீரோயினாக கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

 

Arulnidhi

 

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் லொஸ்லியாவை எப்படி கமிட் செய்தார்கள், என்ற குழப்பம் ஏற்பட்டாலும் இந்த தகவல் நம்பகமான வட்டாரத்தில் இருந்து வெளியாகியிருப்பதால், லொஸ்லியா அருள்நிதிக்கு ஜோடியாவது கிட்டதட்ட உறுதியானது என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

Related News

5264

“திரையுலகில் என் பெற்றோர் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான்” - ஆர்.கே.செல்வமணி நெகிழ்ச்சி
Saturday August-09 2025

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...

மிரட்டும் ‘குற்றம் புதிது’ டீசர்! - கவனம் ஈர்த்த அறிமுக நடிகர் தருண் விஜய்
Saturday August-09 2025

தலைப்பு மற்றும் டீசர் மூலம் கவனம் ஈர்த்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது...

இசைஞானியிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்
Saturday August-09 2025

பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை  பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்...

Recent Gallery