Latest News :

மீண்டும் ஜெய்க்கு ஜோடியான அதுல்யா ரவி!
Monday July-15 2019

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் ‘கேப்மாரி’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, மற்றொரு படத்திலும் ஜெய்க்கு மீண்டும் ஜோடியாகியிருக்கிறார். 

 

வெற்றிசெல்வன் எஸ்.கே என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. தற்போது ஜெய், அதுல்யா ரவின் ஹீரோ, ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகை, நடிகர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், முக்கிய கதாபாத்திம் ஒன்றுக்காக ‘சீதக்காதி’ படத்தின் மூலம் அறிமுகமானவரும், நடிகர் வைபவின் அண்ணனுமான சுனில் ஒப்பந்தமாகியிருக்கிறார். மற்றொரு நாயகியாக ‘நெடுநல்வாடை’ புகழ் அஞ்சலி நாயர் நடிக்கிறார்.

 

இப்படம் குறித்து இயக்குநர் வெற்றிசெல்வன் கூறுகையில், “இது ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு படம். ஜெய்யின் கதாபாத்திரம், நம் சுற்றுப்புறத்தில் காணும் ஒருவரை போன்ற ஒரு யதார்த்தமான ஒரு மனிதரை போன்றது. இருப்பினும், சில கட்டாயமான சூழ்நிலைகள் நீதியை தனது கைகளில் எடுக்கும்படி அவரை கட்டாயப்படுத்துகின்றன. இது மகிழ்ச்சி, எனர்ஜி மற்றும் கோபமான இளைஞனையும் இணைக்கும் ஒரு கதாபாத்திரம். அதுல்யா ரவி ஜெய்யின் ஜோடியாக நடிக்கிறார். ஸ்கிரிப்டை எழுதிய உடனேயே, நாங்கள் உண்மையில் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு நடிகையை தேடிக் கொண்டிருந்தோம். மேலும் அதுல்யா சரியானவராக இருப்பதாக உணர்ந்தோம்.” என்றார்.

 

சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜே.பி.தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். ஹாலிவுட் நிறுவனமான ரெயின் ஆஃப் ஏரோஸ் எண்டர்டெயின்மெண்டின் கிளை நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கிறார்.

 

மதுரை மற்றும் கேரளாவில் சில பகுதிகளில் படமாக்கப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Related News

5266

“திரையுலகில் என் பெற்றோர் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான்” - ஆர்.கே.செல்வமணி நெகிழ்ச்சி
Saturday August-09 2025

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...

மிரட்டும் ‘குற்றம் புதிது’ டீசர்! - கவனம் ஈர்த்த அறிமுக நடிகர் தருண் விஜய்
Saturday August-09 2025

தலைப்பு மற்றும் டீசர் மூலம் கவனம் ஈர்த்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது...

இசைஞானியிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்
Saturday August-09 2025

பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை  பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்...

Recent Gallery