சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரேயாவுக்கு, திருமணத்திற்குப் பிறகு லக் அடித்திருக்கிறது. ஆம், திருமணத்திற்குப் பிறகு சில தெலுங்குப் பட வாய்ப்புகளைப் பெற்ற ஸ்ரேயா, தற்போது தமிழ்ப் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
’சண்டகாரி - த பாஸ்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக விமல் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக முதல் முறையாக ஸ்ரேயா நடிக்கிறார். ஆர்.மாதேஷ் இப்படத்தை இயக்குகிறார்.
பாஸ் புரொடக்ஷன்ஸ் கார்ப்பரேசன் மற்றும் மெட்ரோ நெட் மல்டிமீடியா நிறுவனங்கள் இணைந்து வழங்க, ஜெ.ஜெயகுமார் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்திற்கு குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கிறார். கபிலன், விவேக் பாடல்கள் எழுதுகிறார்கள். தினேஷ் எடிட்டிங் செய்ய, அபீப் நடனம் அமைக்கிறார். கனல் கண்ணன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
மலையாளத்தில் திலீப் மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற மை பாஸ் என்ற படத்தை தழுவி எடுக்கப் படும் படம் இது.
’திரிஷ்யம்’ எப்படி சூப்பர் ஹிட் அடித்ததோ அது மாதிரி மை பாஸ் கேரளாவில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த படம். படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு நியூயார்க் வெனிஸ் லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. கொச்சின் கோவா காரைக்குடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
படம் குறித்து இயக்குநர் மாதேஷ் கூறுகையில், “வித்தியாசமான ஆக்ஷன் காமெடி படம். முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி வருகிறது. பெரும் பகுதி வெளி நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது கேரளாவில் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.” என்றார்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...