ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் ஜோதிகா எங்கிருந்து தான் இப்படி கதைகளை பிடிக்கிறாரோ! என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களின் மூலம் அசத்துகிறார். அந்த வகையில், ‘ராட்சசி’ அயை அடுத்து ஜோதிகா நடிக்கும் புதிய படம் இன்று ஆரம்பமானது.
’பொன்மகள் வந்தாள்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் இயக்குநர்களும் நடிகர்களுமான கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டியராஜனும், பார்த்திபனும் குருவின் படத்தில் முதல் முறையாக ஜோதிகாவுக்காக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஜே.ஜே.ப்ரட்ரிக் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, அமரன் கலையை நிர்மாணிக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது. இதில், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் ஹரி, பிரம்மா, முத்தையா, டி.ஜே.ஞானவேல், 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜசேகர் கற்பூர பாண்டியன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, விநியோகஸ்தர் பி.சக்திவேலன், ஜோதிகா, பாகியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், இயக்குநர் பெட்ரிக் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...