Latest News :

கவர்ச்சிக்கு மாறும் ரித்விகா!
Monday September-11 2017

பாலாவின் ‘பரதேசி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரித்விகா, தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். 

 

கதையம்சம் உள்ள கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ரித்விகா கபாலியில் நடித்து பெரும் பாராட்டுப்பெற்றார். இருந்தாலும், கமர்ஷியல் கதாநாயகியாக வேண்டும் என்பது தான் அவரது பெரும் ஆசையாம். ஆனால், இந்த ஆசை நிறைவேற சற்று கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருந்ததால், சில படங்களில் வாய்ப்புகளை நிராகரித்து வந்தவர், தற்போது கவர்ச்சியாக நடிக்க ஓகே சொல்கிறாராம்.

 

அப்படி ரித்விகா கவர்ச்சியாக நடித்துள்ள படமாக ‘டார்ச்லைட்’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக சதா நடிக்க மற்றொரு ஹீரோயினாக ரித்விகா நடிக்கிறார். விலை மாதுக்களைப் பற்றிய படமான இப்படத்தில் சதா மற்றும் ரித்விகா இருவரும்  விலை மாதுவாக நடிக்கிறார்கள்.

Related News

527

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery