முத்தத்திற்காக முன்னணி நடிகரின் படத்தை நிராகரித்த சாய் பல்லவி!
Wednesday July-17 2019

‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவி, அப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். இதையடுத்து தெலுங்கு சினிமாவில் எண்ட்ரியாகி ஏகப்பட்ட வாய்ப்புகளைப் பெற்று வருபவர், தமிழிலும் நடித்து வருகிறார்.

 

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தாலும், கதை தேர்விலும், கதாபாத்திர தேர்விலும் சாய் பல்லவி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

 

இந்த நிலையில், முத்தக்காட்சி ஒன்றுக்காக முன்னணி நடிகருடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை சாய் பல்லவி நிராகரித்திருக்கிறார்.

 

தெலுங்கு சினிமாவில் முன்னணி இளம் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் ‘டியர் காம்ரேட்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவியை தான் முதலில் அனுகியிருக்கிறார்கள். ஆனால், படத்தில் முத்தக்காட்சி இருந்ததால் அதில் நடிக்க முடியாது, என்று கூறி அந்த வாய்ப்பையே சாய் பல்லவி நிராகரித்துவிட்டாராம். 

 

சாய் பல்லவி நிராகரித்த பிறகே ராஷ்மிகாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

Related News

5271

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery