Latest News :

பிக் பாஸ் வீட்டு பெட்ரூமில் நடக்கும் கொடுமை! - வனிதா பேட்டியால் கிளம்பிய சர்ச்சை
Wednesday July-17 2019

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு புகார்கள் வந்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களிடம் செக்ஸ் டீல் பேசப்படுவதாக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது பிரபல விஜே ஸ்வேதா ரெட்டி குற்றம் சாட்டியிருந்தார்.

 

இந்த நிலையில், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளராக திகழ்ந்த வனிதா விஜயகுமார், கடந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு நடக்கும் கொடுமை குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

பிக் பாஸ் போட்டியை பரபரப்பாக நகர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த வனிதா, தனது அதிரடியான நடவடிக்கையால் மக்களிடம் கெட்ட பெயர் வாங்கினாலும், பிக் பாஸ் போட்டியில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால், அவரது ஆட்டம் ரொம்ப ஓவராக போனதாலும், அவர் செய்வது அனைத்தும் நாடகம் என்பது மக்கள் புரிந்துக் கொண்டதாலும், அவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்கள்.

 

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா, தற்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதன்படி அவர் அளித்த பேட்டி ஒன்றில், ”பிக் பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல டிவியில் தான் காட்டுவார்கள். ஆனால், ஒரு சில நிமிடங்களிலேயே லைட் போட்டுவிடுவார்கள். அந்த வெளிச்சத்தில் தான் உறங்க வேண்டும். வெளிச்சத்தில் யாருக்கும் சரியான உறக்கம் வராததால், சரியாக தூங்காமல் பலர் கஷ்ட்டப்படுவார்கள்.”  என்று கூறியிருக்கிறார்.

 

Big Boss Bed Room

 

சரியான தூக்கம் இல்லை என்றால், அதுவும் இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். ஆனால், அது குறித்து கவலைப்படாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போட்டியார்களை இப்படி கொடுமைப்படுத்தியிருப்பது கண்டனத்துக்குரியது என்று பலர் கூறி வருகிறார்கள்.

 

ஏற்கனவே, பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய வனிதா, தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமை குறித்து பேசியிருப்பதால், அவர் மீது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பார்கள் கடுப்பாகி இருக்கிறார்களாம்.

Related News

5274

’சொட்ட சொட்ட நனையுது’ படம் உங்கள் மனதை மாற்றும் - நடிகர் நிஷாந்த் ரூஷோ நம்பிக்கை
Thursday August-07 2025

அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...

வெஸ்டர்ன் பாடலாக இருந்தாலும் அதில் மெலோடி இருந்தால் தான் ஹிட் ஆகும் - இசையமைப்பாளர் சபேஷ்
Thursday August-07 2025

ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

Recent Gallery