வாக்கு சீட்டால் முறைகேடுகள் நடக்கிறதா?! - விவாதத்திற்கு உள்ளான ‘களவாணி 2’
Wednesday July-17 2019

இந்திய அளவில் தேர்தலில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. தற்போது இருக்கும் வாக்கு எந்திரம் மூலம் முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டும் அரசியல் கட்சிகள், வாக்கு சீட்டு முறையால் தவறுகள் நடப்பதை தடுக்கலாம் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், விமல், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ஓவியா ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘களவாணி 2’ படத்தில் வாக்கு சீட்டு முறையால் நடக்கும் முறைகேடுகள் குறித்து படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

 

ஊராட்சி தேர்தலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள ‘களவாணி 2’ கதையில், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரை எதிர்த்து விமல் போட்டியிடுகிறார். துரை சுதாகர் வில்லனாக இருந்தாலும், நேர்மையான முறையில் தேர்தலை எதிர்கொள்ள, ஹீரோ விமல், ஓட்டு போட செல்பவர்களிடம் வாக்கு சீட்டை எடுத்துக்கொண்டு வந்தால் பணம் கொடுப்பதாக கூற, ஓட்டு போட செல்பவர்களும் தங்களது வாக்கை பதிவு செய்யாமல் வாக்கு சீட்டை எடுத்து வந்து விமலிடம் கொடுக்கிறார்கள். பிறகு அவரது ஆட்கள் அந்த சீட்டுகளை எடுத்துக்கொண்டு விமல் சின்னத்திற்கு அத்தனை வாக்குகளையும் பதிவு செய்கிறார்கள், இப்படி ஒரு களவாணி தனத்தை செய்து விமல் வெற்றியும் பெறுகிறார்.

 

அரசியல் கட்சிகள் பல வாக்கு சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், என்று வலியுறுத்தி வரும் நிலையில், வாக்கு சீட்டு முறையால் இப்படி பல மோசடிகள் செய்யலாம், என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கும் ‘களவாணி 2’ படத்தால் அரசியல் ஏரியாவில் பரபரப்பு ஏற்பட்டிருப்பதோடு, விவாதத்திற்கும் உள்ளாகியுள்ளது.

 

Kalavani 2

 

தற்போது இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கும் ‘களவாணி 2’ ஹீரோ விமல், ஹீரோயின் ஓவியா மற்றும் இயக்குநர் சற்குணத்திற்கு கம் பேக் படமாக அமைந்திருப்பதோடு, பப்ளிக் ஸ்டார் துரை சுதாகருக்கான அடையாளமாகவும் அமைந்திருக்கிறது.

Related News

5276

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery