தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் அதுல்யா ரவியும் ஒருவர். கோயமுத்தூரை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான இவர், பல்வேறு குறுமப்படங்களில் நடித்துவிட்டு, ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து, ’கதாநாயக்ன்’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘சுட்டு பிடிக்க உத்தரவு’ ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.
தற்போது, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் ஹீரோவாக நடித்திருக்கும் ‘கேப்மாரி’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் அதுல்யா, மேலும் ஒரு புதுப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
இந்த நிலையில், அதுல்யா தனது அழகை கூட்டுவதற்காக முகத்தில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட அதுல்யாவை புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞர்கள் சிலர், அவரது முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்ததோடு, நடிகை சமந்தா போல அதுல்யா ரவியும் முகம் மற்றும் மூக்கை அழகுப்படுத்துவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம், என்று சந்தேகித்தனர். ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது, என்பதை அதுல்யா ரவி தான் விளக்கம் வேண்டும்.
நடிகை அதுல்யா சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...