சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஹீரோயினாக வெற்றிப் பெற்ற பிரியா பவானி சங்கர், வேகமாக வளர்ந்து வருகிறார். ‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’ ஆகியப் படங்கள் வெற்றிப் பெற்றதால், வெற்றிப் பட நடிகை என்று பெயர் எடுத்திருப்பவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது.
தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் பிரியா பவானி சங்கர், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’விலும் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ’இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து இயக்க இருக்கும் படத்திலும் பிரியா பவானி சங்கர், ஹீரோயினாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நடிப்பதால் அவர் கமர்ஷியல் கதாநாயகியாகவும் கலக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...