மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கண்டனம் தெரிவித்த நடிகர் சூர்யா, சமீபத்தில் நடைபெற்ற அகரம் பவுண்டேஷன் நிகழ்வில், இது குறித்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசுகையில், புதிய கல்வி முறையினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதோடு, ஏழை மாணவர்களின் உயர் கல்வி பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும், புதிய கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் குறித்து விரிவாக பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்வி முறையை அமல்படுத்த கூடாது என்றும் வலியுறுத்தினார். சூர்யாவின் இத்தகைய பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்ததோடு, புதிய கல்வி முறைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், சூர்யாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க ஐடி பிரிவு மாநில தலைஅர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், புதிய கல்வி முறை குறித்து சில விளக்கங்கள் அளித்தவர், சூர்யா கட்டியுள்ள ரூ.100 கோடி மதிப்பிலான 7 நட்சட்சத்திர ஓட்டல் போன்ற வீட்டுக்கு நிதி எங்கிருந்து வந்தது என்று சூர்யாவால் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேஷனுக்காக பல வங்கிகளில் கணக்குகள் தொடங்கப்பட்டு, பிறகு அது மூடப்பட்டது ஏன்? உள்ளிட்ட பல கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...