Latest News :

சினிமாவுக்கு குட்பை சொல்லும் ரஜினி மகள்! - தொழிலதிபராகிறார்
Saturday July-20 2019

நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா இருவரும் சினிமாத் துறையில் இயக்குநர்களாக கால் பதித்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ ஓரளவு ஓடினாலும், அவர் அடுத்ததாக இயக்கிய ‘வை ராஜா வை’ அவருக்கு பெரும் தோல்வியை கொடுத்தது. இதையடுத்து படம் இயக்குவதை நிறுத்திய ஐஸ்வர்யா தற்போது தொழிலதிபராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

டேபிள் டென்னிஸ் அணி ஒன்றின் உரிமையாளரான ஐஸ்வர்யா, தற்போது ‘சர்வா யோகா’ நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.

 

சர்வேஷ் ஷஷி மற்றும் நடிகை மலைக்கா அரோரா ஆகியோரல் நிறுவப்பட்டுள்ள இந்த நிறுவனம், நேரடி மற்றும் டிஜிட்டலின் மூலம் யோகாவில்னால் உண்டாகும் நன்மைகளை பார்வையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் எடுத்துரைக்கின்றனர். இந்த நிறுவனத்திற்கு மலைக்கா அரோரா, சாஹித் கபூர், பாப் நட்சத்திரம் ஜெனிபர் போபஸ் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் நிதி அளித்துள்ளனர்.

 

Aishwarya Rajinikanth

 

உலக அளவிலான முதலீட்டின் மூலம் ரூ.34.47 கோடி ரூபாய் நிதி திரட்டியிருக்கும் இந்நிறுவனம் அடுத்த மாதத்திற்குள் இந்தியாவில் 100 சர்வா ஸ்டூடியோக்களை தொடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் 20200 க்குள் 500 ஸ்டூடியோக்களை ஓயோ நிறுவனத்துடன் இணைந்து அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

 

சர்வா மற்றும் திவா யோகா குறித்து கூறிய ஐஸ்வர்யா ஆர்.தனுஷ், “தென்னிந்தியாவில் செயல்பாடுகளை அதிகரிக்க சர்வா நிறுவனம் உதவும். இந்த நவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் நாம் தினசரி போராடி வருகின்றோம். மலைக்கா மற்றும் சர்வேஷின், சர்வா மற்றும் திவா யோகா பணிகளை நான் பார்த்து வருகிறேன். ஆரோக்கியத்துடன் தொடர்புடைய எல்லாவற்றிலும் எங்கள் சிந்தனை செயல்முறைகள் எப்படி சரியாக இணைகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் இருவருடனும் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இந்த கூட்டணியின் மூலம் தென்னிந்தியாவில் சர்வா மற்றும் திவா யோகா அதிகரிக்கும் என்று நம்புகிறேன். நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு நினைவூட்ட வேண்டும், என்பது சர்வாவின் குறிக்கோள், நான் இதில் முதலீடு செய்ததற்கான காரணமும் இதுவே.” என்று கூறினார்.

 

Rajinikanth and Aishwarya Dhanush

 

இப்படி தொழில் ரீதியாக பல்வேறு நிறுவனங்களில் மூதலீட்டாளராக உருவெடுத்து வரும் ஐஸ்வர்யா, சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டார் என்றே கூறப்படுகிறது.

Related News

5284

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

Recent Gallery