யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடையும் பலர், சினிமா வாய்ப்பு பெற்று பல படங்களில் நடித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் படம் எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் ’கிரவுட் பண்டிங்’ என்ற முறையில் பணம் வசூலிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.
அந்த வகையில், பரிதாபங்கள் என்ற தலைப்பில் பல அரசியல்வாதிகளை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டு பிரபலமான துரை மற்றும் சுதாகர் இருவரும் கிரவுட் பண்டிங் முறையில் பொதுமக்களிடம் கோடி கணக்கில் பணம் வசூல் செய்து அதன் மூலம் ஒரு படத்தை தயாரித்து அதில் அவர்களே ஹீரோவாகவும் நடிக்கிறார்கள்.
அவர்கள் நடத்தி வரும் பரிதாபங்கள் யூடியூப் சேனலில், தாங்கள் படம் எடுக்கப் போவதை வெளியிட்டு அதற்காக நிதியும் கேட்டிருந்தார்கள். அவர்களின் அறிவிப்பை பார்த்த பலர் வாரி வழங்க ஆரம்பித்த நிலையில், தற்போது ரூ.6.3 கோடிக்கு மேல் பணம் சேர்ந்துள்ளதாம்.
பரிதாபங்க புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ள இப்படத்தை எஸ்.ஏ.கே எனும் அறிமுக இயக்குநர் இயக்க உள்ளார்.
இப்படத்திற்காக நிதி அளித்த அனைவருக்கும் படத்தின் தகவல்களை அவ்வபோது தெரிவிக்க, இணையதளம் ஒன்றை ஆரம்பித்திருக்கும் துரையும், சுதாகரும் பண்ட் மேலன் ஆப் மூலமாக கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்படுவது முறைப்படுத்தப்பட்டு அனைத்து பண முதலீட்டார்களுக்கு விவரம் அளிப்பார்களாம்.
இதன் மூலம் ஆசியாவிலேயே கிரவுட் பண்டிங் மூலம் அதிகமான நிதியை பெற்றிருக்கும் துரை மற்றும் சுதாகரை பார்த்து மேலும் சில யூடியூப் பிரபலங்களும் கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டி படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, யூடியூபில் அதிகமான சர்க்ரைபர்ஸை வைத்திருப்பவர்கள் விமர்சனம் செய்வதாக கூறி, திரைப்படங்களை தாறுமாறாக விமர்சித்து தயாரிப்பாளர்களை மிரட்டி பணம் பறிப்பதாக குற்றசாட்டு உள்ள நிலையில், இந்த கிரவுட் பண்டிங் முறை மூலமாக பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் முறையால் எதாவது புகார் வராமல் இருந்தால் சரி.
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...