Latest News :

கவர்ச்சியாக நடிக்க ரெடியான ஜனனி ஐயர்! - காரணம் இந்த நடிகராம்
Monday July-22 2019

சென்னையை சேர்ந்த பிரபல மாடலான ஜனனி ஐயர் பாலாவின் ‘அவன் இவன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானர். தொடர்ந்து ’தெகிடி’, ‘அதே கண்கள்’, ‘பாகன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஜனனி ஐயர், ’தொல்லை காட்சி’, ’கசட தபற’ மற்றும் அசோக் செல்வனுக்கு ஜோடியாக தலைப்பு வைக்கப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.

 

எப்போதும் ஹோம்லியாக மட்டுமே நடிக்கும் ஜனனி ஐயர், ஒரு போதும் தான் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். ஆனால், அவரது இந்த உறுதியை ஒருவருக்காக மாற்றும் முடிவிலும் இருக்கிறாராம்.

 

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியவரிடம், தற்போது டிரெண்டாக உள்ள அடல்டு காமெடி படத்தில் டாப் ஹீரோவோடு நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, அது அஜித் படமாக இருந்தால் நடிப்பேன், என்று கூறியவர், அது இரண்டு நிமிட வேடமாக இருந்தாலும் தான் நடிக்க ரெடியாக இருப்பதாக கூறியவர், அதற்காக சம்பளம் கூட வாங்காமல் நடிக்கவும் தயாராக இருக்கிறாராம்.

 

Janani Iyer

 

அஜித்துடன் நடிக்க பல நடிகைகள் ஆசைப்படும் நிலையில், ஜனனி ஐயர் அஜித் படத்தில் நடிப்பதில் வெறியாக இருக்கிறார், என்று சொல்லும் அளவுக்கு தீவிரமாக இருக்கிறார்.

Related News

5297

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

Recent Gallery