மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வந்தாலும், ரிலீஸ் தேதியில் பல தடுமாற்றங்களை சந்தித்து வருகிறது.
இம்மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் சில பணிகள் முடிய காலதாமதமாவதால் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று நாம் ஏற்கனவே நமது செய்தியில் தெரிவித்திருந்தோம். இதற்கிடையே, விஜயின் மெர்சலுடன் வேலைக்காரன் மோத இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து படக்குழுவினே படத்தின் வேலைகள் சில முடியாததால், படத்தை டிசம்பர் மாதம் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் வெளியாக இருந்த செப்டம்பர் 29 ஆம் தேதி விஜய் சேதுபதியின் கருப்பன் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார். பன்னீர் செல்வம் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...