Latest News :

நயன்தாராவின் காதலரை கலாய்க்கும் பிரபல நடிகரின் ரசிகர்கள்!
Monday July-22 2019

தமிழ் சினிமாவின் நம்பர் ஹீரோயினாக, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வரும் நயன்தாரா, சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அவ்வபோது தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளியூர் செல்வதை மட்டும் மிஸ் செய்வதில்லை. 

 

இந்த காதல் ஜோடியின்  வெளியூர் சுற்றுலா புகைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்களின் காதில் புகை வர ஆரம்பித்துவிடும். அதுவும், சிம்பு ரசிகர்கள் என்றால் சொல்லவே வேண்டாம், காது, வயிறு என்று உடலின் உள்ள அத்தனை பாகங்களும் செக ஹாட்டாகிவிடும்.

 

இப்படி சும்மாவே காட்டு...காட்டு...என்று காட்டும் சிம்பு ரசிகர்களிடம் எதாவது விஷயம் கிடைத்தால் சும்மா இருப்பார்களா? வெச்சி செஞ்சிர மாட்டாங்க, அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது.

 

அதாவது, சிம்பு சினிமாத் துறைக்கு வந்து 35 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் பல்வேறு வகையில் கொண்டாடி வரும் நிலையில், இது தொடர்பாக புதிய ஹேஷ்டேக் ஒன்றையும் உருவாக்கி அதில் வாழ்த்து தெரிவித்து டிரெண்டாக்கி வருகிறார்கள்.

 

Simbu

 

இந்த வாழ்த்து பட்டியலில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்திருக்கிறார். அவர் வெளியிட்ட வாழ்த்து பதிவில், தான் செய்கிற அத்தனை காரியங்களுக்கும் சிறப்பு சேர்க்கும் சிம்பு சாருக்கு எனது வாழ்த்துகள், உலகம் முழுக்க இருக்கும் உங்கள் ரசிகர்கள் தான் உங்களுக்கு பெரும் பலர் சார், என்று தெரிவித்துள்ளார்.

 

நயன்தாராவின் இன்னாள் காதலரான விக்னேஷ் சிவன், முன்னாள் காதலர் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதற்கு பலர் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், சிம்பு ரசிகர்கள் மட்டும், ”சகளை வெர்சஸ் ரகளை”, “நீ படிக்குற பள்ளிக்கூடத்துல எங்க சிம்பு ஹெட்மாஸ்டர் பாஸ்” என்று பல கமெண்ட்களை போட்டு, அவரை கலாய்க்க தொடங்கியிருக்கிறார்கள்.

Related News

5301

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

Recent Gallery