பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 யில், ரசிகர்களை அதிகம் கவர்ந்த போட்டியாளராக இருப்பவர் லொஸ்லியா. இலங்கையை சேர்ந்த மாடல் மற்றும் செய்தி வாசிப்பாளரான இவர் மீது மற்றொரு போட்டியாளரான கவினுக்கு ஒரு கண் இருக்க, அம்மணியோ சேரனிடம் தான் ரொம்ப நெருங்கி பழகுகிறார். இதற்கு காரணம், தனது தந்தையைப் போல சேரன் இருப்பதாகவும் லொஸ்லியா கூறி வருகிறார்.
அதே சமயம், பிக் பாஸ் வீட்டில் உள்ள சிலர் சேரன் லொஸ்லியாவிடம் பழகுவதை தவறாக பார்க்கிறார்கள். குறிப்பாக, முதலாவதாக எலிமினேட் செய்யப்பட்ட பாத்திமா பாபு கூட, சேரன், லொஸ்லியாவை தொடுவதை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து, அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார்.
ஆனால், யாருடைய விமர்சனத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சேரன், தன் மனதுக்குள் எந்தவித அழுக்கும் இல்லை, என்பதை வார்த்தையால் சொல்லாமல், தனது மவுனத்தின் மூலமாகவே மற்றவர்களுக்கு புரிய வைத்து தொடர்ந்து கண்ணியமான போட்டியாளராகவே நடந்துக் கொள்வது ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது.
இந்த நிலையில், லொஸ்லியா சேரனிடம் நெருங்கி பழக, அவர் சொன்ன தனது தந்தையை போல இருக்கிறார், என்ற காரணத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது தந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. என்ன ஆச்சர்யம், அவர் பார்ப்பதற்கு சேரனை போலவே இருக்கிறார்.
இப்போது புரிந்திருக்கும் சேரனுக்கும், லொஸ்லியாவுக்கும் இடையே இருப்பது தந்தை, மகள் உறவு தான் என்று.
இதோ அந்த புகைப்படம்,
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...