அஜித் ரசிகர்களுக்கு சோகமான செய்தி!
Tuesday July-23 2019

தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித், நடிப்பில் கடைசியாக வெளியான ‘விஸ்வாசம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது அடுத்தப் படமாக ‘நேர்கொண்ட பார்வை’ வெளியாக இருக்கிறது. இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான இப்படத்தை எச்.வினோத் இயக்கியிருக்கிறார். அஜித்தின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கி தான் வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

 

படத்தில் அஜித் குறைவான காட்சிகளே வருவதாக இருந்த போதிலும், ரசிகர்களுக்காக வினோத் சில கூடுதலான காட்சிகளை சேர்த்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் படத்தின் விலையை அதிகமாக கூறுவதால், படம் இதுவரை வியாபாரம் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது. 

 

‘விஸ்வாசம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதால், ‘நேர்கொண்ட பார்வை’ படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்க்கும் தயாரிப்பாளர், விஸ்வாசம் படத்தை விட அதிகமான விலைக்கு ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை விற்க முயற்சிக்கிறாராம். ஆனால், ‘நேர்கொண்ட பார்வை’ அஜித் படம் போல இருக்காது, என்பதால் விநியோகஸ்தர்கள் பெரிய விலை கொடுத்து வாங்க தயங்குகிறார்கள். இதனால், படத்தின் வியாபாரம் தற்போது வரை மந்தமாகவே இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

 

இந்த இரண்டு தகவல்களாலும் சோர்வடைந்த அஜித் ரசிகர்களை படத்தின் டிரைலர் சற்று சுறுசுறுப்படைய வைத்தாலும், தற்போது வெளியாகியிருக்கும் புது தகவல், அவர்களை இன்னும் சோகமாக்கியுள்ளது.

 

அதாவது, படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருக்கும் வித்யா பாலன், படத்திற்காக மொத்தமாக வெறும் 2 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்தாராம். அவரது காட்சி வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே இடம்பெறுகிறதாம். அதிலும், 4 நிமிடங்கள் பாடல் காட்சியில் வருபவர், மீதம் 5 நிமிட காட்சியில் மட்டும் வசனம் பேசியிருக்கிறாராம்.

 

Actress Vidya Balan

 

இந்திய சினிமாவே கொண்டாடும் நட்சத்திரமான வித்யா பாலன், அஜித் காமினேஷன் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படத்தில் அஜித்தே கொஞ்சம் நேரம் தான் வருவார் என்ற தகவலோடு, வித்யா பாலன், அதைவிடவும் கொஞ்சமாக சில நிமிடங்களே படத்தில் இடம்பெறுவார் என்ற தகவல் அஜித் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related News

5303

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery