Latest News :

பிக் பாஸில் இருந்து வெளியேறும் 4 வது போட்டியாளர்! - ரசிகர்களின் தேர்வு இவர் தான்
Tuesday July-23 2019

தமிழ் பிக் பாஸ் சீசன் 3 யில் எமிலிமினேஷன் ரவுண்ட் தொடங்கப்பட்டிருப்பதால், போட்டி விறுவிறுப்பாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் அவ்வபோது பரபரப்பை ஏற்படுத்தி வந்த வனிதாவே வெளியேற்றப்பட்டதால் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், மோகன் வைத்யாவின் நடவடிக்கைகள் நடிப்பதாக இருக்கிறது, என்ற குற்றச்சாட்டு எழுந்ததும் அவரும் எலிமினேட் செய்யப்பட்டார்.

 

இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள், ஒரிஜினலாக இருப்பவர்களே அங்கு நீடிக்க முடியும், என்ற எண்ணம் ரசிகர்களிடம் ஏற்பட்டிருப்பதால், பிக் பாஸ் நிகழ்ச்சி முன்பை விட சற்று அதிமாகவே சூடு பிடித்திருப்பதாக சேனல் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

 

இந்த நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆக இருக்கும் 4 வது போட்டியாளர் யார்? என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் பெரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த வார எல்மினேட் பட்டியலில் சேரன், சாக்‌ஷி, சரவணன், கவின், மீரா, அபிராமி ஆகியோர் பெயர்கள் உள்ளன.

 

இவர்களில் யார் வெளியேறும் போட்டியாளர், என்பதை அறிந்துக்கொள்ள வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் யாருக்கு குறைவான வாக்குகள் கிடைக்கிறதோ அவர்களே இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர். அதன்படி, ரசிகர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சாக்‌ஷி தான் மிக குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறார். இந்த நிலை இந்த வாரம் முழுவதும் தொடர்ந்தால் நிச்சயம் சாக்‌ஷி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்.

 

இதோ வாக்கு எண்ணிக்கை பட்டியல்,

 

Big Boss Elimination List

Related News

5304

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

Recent Gallery