Latest News :

சீரியல் சிம்புவான ஆதி! - ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை அனுபவிக்கும் கொடுமைகள்
Thursday July-25 2019

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ராமன் நடிக்கிறார். அவரது மகன் கதாபாத்திரத்தில் ஆதி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கார்த்திக் ராஜால் சீரியல் குழுவினர் ஏகப்பட்ட தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆரம்பத்தில் இந்த சீரியல் சாதாரணமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், திடீரென்று டி.ஆர்.பி-யில் கடந்த மாதம் முதலிடத்திற்கு வந்துவிட்டது. இதனால், இந்த சீரியல் இடம்பெற்ற ஒட்டு மொத்த குழுவினரும் குஷியடைய, ஹீரோ ஆதிக்கு மட்டும் ஆனவம் தலைக்கு ஏறிவிட்டதாம்.

 

ஆரம்பத்தில், அமைதியாக நடித்து வந்த ஆதி, சீரியல் பிரபலமானதும் பந்தா பேர்வழியானவர், யூனிட்டில் உள்ளவர்களிடமே மோசமாக நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டாராம்.

 

மேலும், தனக்கும், மற்றவர்களும் வித்தியாசம் உண்டு, அதனால் அனைவருக்கும் கொடுப்பது போன்ற சாப்பாட்டை எனக்கும் கொடுக்காதீர்கள், என்று கூறி கோபப்படுபவர், சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது, உடன் நடிப்பவர்கள் கூடுதலாக டேக் வாங்கினாலோ அல்லது இயக்குநர் சீன் நன்றாக வரவில்லை என்பதற்காக ரீடேக், கேட்டாலோ உடனே அப்செட்டாகி யாரிடமும் சொல்லாமல் அந்த இடத்தை சென்றுவிடுவாராம். 

 

இதனால், அவரை அழைத்து வந்து மீண்டும் காட்சிகளை படமாக்குவதற்குள் மொத்த யூனிட்டே படாதபாடு படுவார்களாம்.

 

அத்துடன், ஹீரோயின் விஷயத்திலும் கார்த்திக் ராஜ் கூடுதல் அட்வாண்டேஜ் எடுத்துக்கொள்வாராம். பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சீரியலின் நாயகி சபானாவிடம் அவ்வபோது தனியாக பேச விரும்பும் ஆதி, யாராவது குறிக்கிட்டு, “யார் காட்சி ரெடி” என்று கூறினால், அவர் மீது ஏறு..ஏறு...என்று ஏறிவிட்டு, படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளாமல் கோபமாக தனியாக உட்கார்ந்து விடுவாராம்.

 

இப்படி ஆதி பல தொல்லைகள் கொடுத்தாலும், அவர் மீது சீரியல் குழு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு, ஏற்கனவே இந்த சீரியலின் இயக்குநர், சில நடிகர், நடிகைகள் மாற்றப்பட்ட நிலையில், சீரியலின் முக்கிய கதாபாத்திரமான ஆதியையும் மாற்றினால், மக்களிடம் ஈர்ப்பு இல்லாமல் போய்விடும், என்று சீர்யல் குழு எண்ணுகிறார்களாம். இதனலாயே, ஆதியின் அடாவடித்தனத்தை பொருத்துக் கொண்டு போய்க்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இப்படி பல விதத்தில் தொல்லை கொடுக்கும் ஆதியை சீரியல் உலக சிம்பு என்று கூட சொல்லலாம், என்று அந்த சீரியலில் பணியாற்றும் உதவி இயக்குநர் ஒருவர் வருத்ததுடன் கூறி வருகிறார்.

Related News

5309

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

Recent Gallery