Latest News :

அஜித் பெயரை சொல்லி மோசடி - ஊழியர் சீட் கிழிப்பு
Monday September-11 2017

தான் உண்டு, தனது வேலை உண்டு, என்று இருந்தாலும் பிரச்சினை என்பது அஜித்துக்கு ஆப்ரேஷன் செய்வது போல அவரை எப்போவும் பின் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும் போல. வீடு கட்டிக் கொடுப்பது, வாகனம் வாங்கிக் கொடுப்பது என்று தனது ஊழியர்களை அஜித் திருப்பதிப் படுத்தினாலும், சிலர் அவர் முதுகில் குத்துவதையே வழக்காமாக வைத்திருக்கிறார்கள்.

 

அப்படி சமீபத்தில் அஜித் முதுகில் குத்தியவர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அஜித்துக்கு பர்ஷனல் மேக்கப் மேனாக இருந்தவர், விவேகம் படத்தின் போது அஜித் சார் சொன்னார் என்று கூறி ஒரு நாளைக்கு ரூ.70 ஆயிரத்தை சம்பளமாக வாங்கியுள்ளார். தயாரிப்பு நிறுவனமும் அஜித்தே சொல்லிவிட்டாரே, என்ற எண்ணத்தில் பேரம் பேசாமல் கேட்ட தொகையை கொடுத்து வந்துள்ளது.

 

பிறகு எப்படியோ அஜித் காதுக்கு இந்த விஷயம் செல்ல, அந்த ஊழியரை அழைத்து தீர விசாரித்து நடந்தது உண்மை என்பதை தெரிந்துக் கொண்ட அஜித், அந்த ஊழியரின் சீட்டை உடனே கிழித்திருக்கிறார். 

 

தன்னிடம் உள்ளவர்களே இப்படி தனது பெயரை பயன்படுத்தி மோசடி செய்வதை எண்ணி ரொம்பவே வருத்தப்பட்ட அஜித், இனி சில விஷயங்களை நேரடியாக டீல் செய்ய முடிவு செய்திருப்பதோடு, தன்னிடம் உள்ளவர்களை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளாராம்.

Related News

531

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery