தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற நாயகனான எம்.கே.டி என்ற எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபக் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சட்டசபையில் வாசிக்கப்பட்ட 110 கீழ் விதியின் கீழ் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்கும் தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்திரைப்பட துறையிலும், பாரம்பரிய இசைத்துறையிலும் தியாகராஜ பாகவதரின் பன்முக பங்களிப்பினையும், சாதனையையும் அங்கீகரிக்கும் வகையிலும் அவரது நினைவினை போற்றும் வகையிலும், தமிழ் சினிமாத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயகன் எம்.கே.டி என்று போற்றப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசுக்கு ’தென்னிந்திய நடிகர் சங்கம்’ சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...