Latest News :

சண்முக பாண்டியனுக்கு ஜோடியாகும் முன்னணி ஹீரோயின்!
Thursday July-25 2019

’சகாப்தம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன், ‘மதுரவீரன்’ படத்தை முடித்த கையோடு அமெரிக்காவில் தீவிர பயிற்சி மேற்கொண்டவர், தற்போது உடல் எடையை குறைத்து, மிடுக்கான தோற்றத்திற்கு திரும்பியிருப்பவர், ‘மித்ரன்’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார்.

 

போலீஸ் கதை என்றாலே அவர்கள் அணியும் யூனிபார்ஃம் போல வெரப்பா இருப்பது தான் வழக்கம். ஆனால், இந்த ‘மித்ரன்’ ஆடல், பாடல், காமெடி, செண்டிமெண்ட் என்று அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறதாம்.

 

மேலும், இப்படத்திற்காக சமீபத்தில் படமாக்கப்பட்ட ”சல...சல...” என்ற பாடல் துள்ளலான ஒரு பாடலாக உருவாகியிருப்பதோடு, படக்குழுவினருக்கும் மிகப்பெரிய திருப்தியை பாடல் காட்சி கொடுத்திருக்கிறதாம்.

 

இது குறித்து படத்தின் இயக்குநர் ஜி.பூபாலன் கூறுகையில், “பாடலின் ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் மிகவும் நேசித்தோம். ஏனெனில் அது மிகவும் வேடிக்கையாக இருந்தது, மேலும் மொத்த படப்பிடிப்பு தளமும் மிகவும் எனர்ஜியுடன் இருந்ததை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

ஆரம்பத்தில் இருந்தே, இது ஒரு வணிக ரீதியான பொழுதுபோக்கு படம் என்று குறிப்பிடுகிறோம். படம் ஒரு ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞனை பற்றியது, அவர் ஒரு போலீஸ்காரராகி தனது பக்கத்துக்கு ஊருக்கு வந்து கடமையில் சேருகிறார். எனவே நாங்கள் காதல், ஆக்‌ஷன், டிராமா, நகைச்சுவை மற்றும் குறிப்பாக தாய் - மகன் உணர்வுகளுடன் படத்தை ஒன்றிணைத்துள்ளோம். இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற பின்னணியில் உள்ள பார்வையாளர்களின் ரசனைகளை பூர்த்தி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.

 

அருண் ராஜ் சல சல பாடலில் சாதாரண பதிப்பை எனக்கு வாசித்து காட்டியபோது, அது நிச்சயமாக இறுதி வடிவம் பெறும்போது பாராட்டத்தக்க ஒன்றாக மாறும் என்று நான் உணர்ந்தேன். பின்னர், சதீஷ் தனது நடன அசைவுகள் மூலம் தனது மாயாஜாலத்தை சேர்த்தார். இசை தாளங்களுக்கு ஏற்ப முழுமையான அசைவுகளை பாடல் கொண்டுள்ளது. ஒளிப்பதிவு முரளி கிரிஷ் இந்த பாடலை தனது அழகான காட்சிகள் மூலம் சுவை கூட்டியிருக்கிறார். இந்த பாடலை பார்வையாளர்கள் எவ்வாறு ரசிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, சண்முக பாண்டியன் தனது நடனம் மற்றும் வெளிப்படுத்துதல் மூலம் தன்னை காட்டிக் கொண்ட விதம் இன்னொரு அழகு.” என்றார்.

 

வம்சி கிருஷ்ணா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் அழகம் பெருமாள், சாய் தீனா, பவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஏ.வெங்கடேஷ், விஜய் டிவி கேபிஒய் புகழ் பப்பு, ஆஷிக், முனிஷிகாந்த், தேசிய விருது பெற்ற அர்ச்சனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நடிப்பதற்காக முன்னணி ஹீரோயின்கள் சிலரிடம் இயக்குநர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். விரைவில் அந்த நடிகை யார்? என்பதை அறிவிக்க இருக்கிறார்கள்.

Related News

5315

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

Recent Gallery