இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசைத் துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி ஏ.ஆர்.ரஹமானை கெளரவிக்கும் விதத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வெள்ளி விழா கொண்டாட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திர அரசு சார்பில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், காக்கிநாடாவில் நடைபெற உள்ள இந்த வெள்ளி விழாவில், ரஹ்மானின் 3 மணி நேர இசைக் கச்சேரியும் நடத்தப்பட உள்ளது. இதில், ரஹ்மானுடன் 50 இசைக் கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த 50 பேரையும் திறன் அடிப்படையில் விழா குழுவினர் தேர்வு செய்ய உள்ளனர். இதற்காக வரும் செப்டம்பர் 15 அல்லது 20 ஆம் தேதியில் இருந்து ஆன்லைனில் போட்டிகள் நடைபெற உள்ளது.
வரும் அக்டோபர் அல்லது டிசம்ப மாதத்தி ரஹ்மானின் வெள்ளி விழா ஆண்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ள ஆந்திர அரசு, இந்த நிகழ்ச்சியின் மேடைக்கு மட்டும் ரூ.2 கோடி செலவு செய்ய உள்ளதாம்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...