தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதைக் காட்டிலும் சோலோ ஹீரோயினாக அதிக படங்களில் நடித்து வருகிறார். இந்த படம் வெற்றி பெறுவதால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், நயன்தாராவின் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பல முறை தள்ளிப்போன படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டில் ஏற்பட்ட சர்ச்சையால் படத்திற்கு இலவசமாக விளம்பரம் கிடைத்தும் படம் வியாபரம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாளை (ஜூலை 26) படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதே நாளில் சந்தானத்தின் 'A1', விஜய் சேதுபதி தயாரித்திருக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’, விஜய தேவரகொண்டாவின் டியர் காம்ரேட், சமுத்திரக்கனி நடித்திருக்கும் ‘கொளஞ்சி’, ’நுங்கம்பாக்கம்’, ‘ஆறடி’ ஆகியப் படங்களும் வெளியாகின்றன.
இந்த நிலையில், திடீரென ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே நாளை நயன்தாராவின் படம் வெளியாகாது.
தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த நயன்தாரா நடித்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ வியாபரத்திலும், ரிலீஸிலும் பல சிக்கல்களை சந்தித்து வருவதால், ”நயன்தாராவுக்கு என்னாச்சு...,அவரது படத்திற்கு ஏன் இந்த நிலை” என்று அவரது ரசிகர்கள் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...