பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக பிக் பாஸ் வீடு சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மீரா மிதுன் மற்றும் வனிதா ஆகியோர் மீது போலீஸ் புகார் அளித்ததை தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியது. குழந்தை கடத்தல் தொடர்பாக வனிதாவிடமும், மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சி நடத்துவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக மீரா மிதுனிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பிறகு, போட்டியில் இருந்து இருவரும் வெளியே வந்ததும் தீவிர விசாரணை நடத்துவதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு போலீசார் சென்று விட்டார்கள்.
இந்த நிலையில், இன்று மீண்டும் பிக் பாஸ் வீட்டில் போலீஸ் நுழைந்துள்ளது. காரணம், மீரா மிதுன் தான். மிஸ் தமிழ்நாடு போட்டி நடத்துவதாக கூறி மீரா மிதுன், பல பெண்களிடம் பணம் மோசடி செய்திருப்பதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரிக்க, இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் உள்ள பிக் பாஸ் வீட்டில், எழும்பூர் காவல்நிலைய போலீஸ் அதிகாரிகள் நுழைந்தனர். அவர்கள் மீரா மிதுனிடம் தற்போது விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
விசாரணைக்குப் பிறகு மீரா மிதுன் கைது செய்யப்பட கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...