பிரம்மாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்திருக்கும் ஷங்கர், தேவை இல்லை என்றாலும், பிரம்மாண்டத்தை திணித்து ரசிகர்களை குஷிப்படுத்துவார். அவர் கடைசியாக ரஜினியை வைத்து இயக்கிய ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. படமும் மிகப்பெரிய தொகையை வசூல் செய்தது.
தற்போது, பல பிரச்சினைகளுக்குப் பிறகு ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கும் ஷங்கர், அதற்காக நடிகர், நடிகைகளின் தேதிகளை பெற்று வருகிறார். கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சித்தார்த்தும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தெலுங்கு சினிமாவை நிராகரித்துவிட்டு முழுக்க முழுக்க தமிழ் சினிமாவில் ஆர்வம் காட்டி வரும் சித்தார்த், ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தை பெரிதும் நம்புகிறார். இதற்காகவே, அவர் நடித்து வந்த மற்ற படங்களை அப்படியே நிறுத்திவிட்டு, ‘இந்தியன் 2’ வுக்காக இயக்குநர் ஷங்கர் கேட்ட ஒரு வருட கால்ஷீட்டை வழங்கியுள்ளார்.
’பாய்ஸ்’ படம் மூலம் தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர் ஷங்கர், மொத்தமாக ஒரு வருடம் கால்ஷீட்டை கேட்டவுடன், எந்தவித யோசனையும் இல்லாமல் ஒகே சொன்ன சித்தார்த், தான் நடிக்க இருந்த புது படமான ‘ஆண்மகன்’ படத்தையும் ஒத்திவைத்து ஷங்கரே சரணம் என்று அடிபணிந்துவிட்டார்.
ஏற்கனவே, ஆர்ஜே பாலாஜியிடம் இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் 2’ வுக்காக மொத்தமாக 150 நாட்கள் கால்ஷீட் கேட்டதால், அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...