Latest News :

ஒரே அப்பார்ட்மெண்டில் 8 பேருடன்...! - வாய்ப்புக்காக ‘பாகுபலி’ நடிகை அனுபவித்த கொடுமை
Saturday July-27 2019

சினிமாவில் வாய்ப்புக்காக நடிகை பல்வேறு வகையில் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு அதிகம் ஆளாவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

 

இந்த நிலையில், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்திய சினிமாவில் நடிப்பதற்கு வரும் பெண்கள் இதைவிட அதிகமான கொடுமைகளை அனுபவித்து வருவதாக நடிகை நோரா பதேகி கூறியிருக்கிறார்.

 

கனடாவை சேர்ந்த நடிகை நோரா பதேகி, கார்த்தியின் ‘தோழா’ மற்றும் ‘பாகுபலி’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தம் ஆட்டம் ஆடியிருக்கிறார். பெரும்பாலான படங்களில் சிறு வேடங்களிலும், ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வரும் இவர், தற்போது வருண் தவான் நடிப்பில் உருவாகும் ‘ஸ்ட்ரீட் டான்ஸர்’ இந்தி படத்ஹ்டில் நடித்து வருகிறார்.

 

தனது திரையுலக வாழ்க்கை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், பட வாய்ப்புகளுக்காக தான் அனுபவித்த கொடுமைகளை நோரா பதேகி, பகிர்ந்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து அவர் கூறுகையில், ”இந்தியாவில் வெளிநாட்டவர்கல் வாழ்வது எளிதானதல்ல. நாங்கள் நிறைய கஷ்ட்டப்படுகிறோம். அது யாருக்கும் தெரியாது. எங்களிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். என்னிடம் இருந்து பணம் பறித்திருக்கிறார்கள். என்னை கனடாவில் இருந்து இங்கு அழைத்து வந்த ஏஜென்சி என்னை மிக மோசமாக நடத்தினார்கள். அதனால், அந்த ஏஜென்சியில் இருந்து நான் வெளியேற நினைத்த போது, எனது ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்க மாட்டோம், என்று மிரட்டினார்கள்.

 

அடுத்து 8 பெண்களுடன் ஒரே அப்பார்ட்மெண்டில் தங்க வைத்தனர். அந்த அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்த போது அதிர்ச்சியடைந்தேன். எனது பார்போர்ட்டை அங்கிருந்தவர்கள் திருடி விட்டனர். அதனால், என்னால் கனடாவுக்கு செல்ல முடியவில்லை. அங்கு நான் வசித்தது எல்லாம் பெரிய கொடுமை.

 

நான் மனதளவில் தயாராகாததால் ரொம்பவே கஷ்ட்டப்பட்டேன். பட வாய்ப்புகளுக்காக நான் அனுபவித்த கொடுமைகளை எண்ணி தூங்காமல் தவித்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

5330

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

Recent Gallery