விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக விளங்குகிறார்கள். இவர்களது படம் என்றால் ரசிகர்களுக்கு மட்டும் பண்டிகை அல்ல, சினிமா வியாபாரிகளுக்கும் பண்டிகை தான். அந்த வகையில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், விஜயின் ‘பிகில்’ தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
தற்போது இந்த இரண்டு படங்களின் பஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில், விஜயின் சாதனையை அஜித் முறியடித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் கொடுத்திருக்கிறது.
அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ”அகலாதே...” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், விஜயின் ‘பிகில்’ படத்தின் ‘சிங்கம்பெண்ணே...” என்ற பாடலும் வெளியானது. இந்த இரண்டு பாடல்களும் லட்சக்கணக்கான ரசிகர்களை கடந்திருக்கும் நிலையில், “சிங்கம்பெண்ணே..” பாடலின் சாதனையை அஜித்தின் “அகலாதே...” பாடல் முறியடித்துவிட்டது.
அதாவது, ”சிங்கம்பெண்ணே...” பாடல் யூடியுபில் 44 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. ஆனால், அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் “அகலாதே...” பாடலோ 24 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து விஜய் சாதனையை எளிதாக முறியடித்திருக்கிறது.
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...
பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...