Latest News :

பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுன்! - காரணம் இவர் தான்
Monday July-29 2019

பிக் பாஸ் சீசன் 3 யில் இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். நேற்றைய எலிமினேட்டில் நான்காவது போட்டியாளராக மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார். அவர் தான் வெளியேறப் போகிறார், என்பதை நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

 

நேற்றைய எலிமினேஷன் ரவுண்டில் வெளியேறப் போவது மீரா மிதுன், தான் என்று கமல் அறிவித்த பிறகும், சிலர் கடைசி நேரத்தில் இது மாறலாம், என்று எதிர்ப்பார்த்தனர். இதனால், அவருக்கு பதில் சாக்‌ஷி எலிமினேட் செய்யப்படுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி ஏதும் நடக்காது என்று கூறிய கமல்ஹாசன், மீர மிதுனை வெளியேற்றினார். 

 

மீரா மிதுன் வெளியேறுவதற்கு மிக முக்கிய காரணம் சேரன் தான். நாட்டாமை டாஸ்கில் சேரன் மீது மீரா மிதுன் கூறிய பொய்யான புகரால் தான் ரசிகர்கள் அவர் மீது கோபம் கொண்டதால், நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்றார்.

 

மேலும், சக போட்டியாளர்களிடம் “யாரை வெளியேற்ற நினைக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு சேரன், மீரா மிதுன் தான் வெளியேற வேண்டும், என்று பல முறை கூறினார். அத்துடன் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக மீரா மிதுனை வெளியேற்றிவிடுவேன், என்றும் அவர் அவ்வபோது கூறி வந்துள்ளார். அவர் நினைத்தது போலவே தற்போது நடந்துள்ளது.

 

Cheran in Big Boss

 

இதை உறுதிப்படுத்தும் விதமாக, மீரா மிதுன் வெளியேறிய பொழுது, சேரனை பார்த்து ”நீங்க ஜெயிச்சிடீங்க.. உங்களுக்கு முன்னர் என்னை வெளியில் அனுப்ப வேண்டும்னு சொன்னிங்க. வின் பண்ணிடீங்க” என்று கூறினார்.

 

ஆக மொத்தத்தில், மீரா மிதுன் வெளியேற்றப்பட்டதற்கு சேரனும் ஒரு காரணம்.

Related News

5338

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

Recent Gallery