Latest News :

சிம்புவின் அடாவடித்தனம்! - அப்செட்டான தயாரிப்பாளர்!
Monday July-29 2019

சிம்புவை வைத்து படம் எடுப்பதும், அந்த படத்திற்கு பிறகு சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் திரையுலகில் இருப்பதும் அதிசியமான ஒன்றாகவே இருந்த நிலையில், ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்குப் பிறகு சிம்புவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததால், அவரும் பிற நடிகர்களை போல தான், இனி அவரை வைத்து எந்தவித பயமும் இல்லாமல், படம் தயாரிக்கலாம் என்று நினைத்த தயார்பாளர்களின் எண்ணத்தில், சிம்பு பெரிய கல்லை போட்டிருக்கிறார்.

 

கெளதம் கார்த்திக்குடன் இணைந்து சிம்பு நடித்து வரும் படம் கன்னடத்தில் வெற்றிப் பெற்ற ‘முஃப்தி’ படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தை கன்னடத்தில் இயக்கிய நார்தனே தான் தமிழிலும் இயக்குகிறார்.

 

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு நிழல் உலக தாதாவாக நடிக்க, கெளதம் கார்த்திக் போலீஸாக நடிக்கிறார்.

 

கடந்த ஜூன் 15 ஆம் தேதி தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, மழை, புயல், கடும் வெயில் என அனைத்து இயற்கை சீற்றங்களை கடந்தாலும், எந்தவித பாதிப்பும் இல்லாமல் படப்பிடிப்பு தொடர்ந்தது.

 

ஆனால், சிம்புவின் அடாவடித்தனத்தால் தற்போது படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருப்பதோடு, படம் முடியுமா? அல்லது அப்படியே டிராப்பாகிவிடுமா? என்ற அச்சத்தில் தயாரிப்பாளர் உள்ளதாக கூறப்படுகிறது.

 

படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, யாரிடமும் சொல்லாமல் எஸ்கேப் ஆன சிம்பு, பிறகு படப்பிடிப்பு குறித்து இதுவரை எதுவும் பேசவில்லையாம். ஏற்கனவே தனது நண்பர்களுடன் படப்பிடிப்பு வந்தவர்கள், அவர்களை தயாரிப்பாளர் செலவிலேயே நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து அடாவடி செய்தவர், தற்போது படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுத்து வருகிறாராம்.

 

படத்தை முடித்தால் போதும், என்ற எண்ணத்தில் சிம்புக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் தயாரிப்பாளர் அமைதியாக இருந்தாலும், சிம்புவின் இந்த அடாவடிதனத்தால் ரொம்பவே அப்செட்டாகி இருக்கிறாராம்.

Related News

5339

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில்...! - கலகலப்பான குறுந்தொடர் ‘லவ் ரிட்டர்ன்ஸ்’
Saturday August-02 2025

பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது...

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

Recent Gallery