Latest News :

’விவேகம்’ படத்தால் மகிழ்ச்சியடைந்தாராம் இயக்குநர் சிவா!
Monday September-11 2017

அஜித்தை வைத்து மூன்றாவதாக சிவா இயக்கிய ‘விவேகம்’ மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினாலும், எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வெற்றியை பெறவில்லை. அதிஜ் ரசிகர்களே படம் செம மொக்கை என்று கூறியது படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாகும். இருந்தாலும், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் விவேகம் லாபகரமான வசூலை ஈட்டியதோடு, பாகுபலி படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஷ் கலெக்‌ஷன் சாதனையையும் முறியடித்தது.

 

இதையடுத்து, மீண்டும் அஜித்தை சிவா தான் இயக்கப் போகிறார் என்று தக்வல்கள் வெளியானாலும், இது குறித்து அஜித் மற்றும் சிவா இரண்டு பேருமே எந்த தகவலும் வெளியிடவில்லை. அதேபோல், படம் ரிலிஸுக்கு பிறகு சிவாவும், மீடியா பேட்டி போன்றவற்றை தவிர்த்துவிட்டு அமைதியாக இருந்தார்.

 

இந்த நிலையில், தற்போது விவேகம் குறித்து பேச தொடங்கியுள்ள இயக்குநர் சிவா, ”விவேகம் படத்தை ஹாலிவுட் ஸ்டைலில் எடுத்ததால் சிலருக்கு பிடிக்காமல் போய்விட்டது. அதனால் தான் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன.

 

ஆபாசம், இரட்டை அர்த்தம் வசனங்கள், மது குடிப்பது என எந்தவிதமான அறுவறுப்பான காட்சிகளும் இல்லாமல் படத்தை ரொம்ப நேர்மையாக எடுத்திருப்பதாக பெண்கள் பலர் என்னை அடையாளம் கண்டு பாராட்டி வருகிறார்கள். அது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.” என்று கூறியுள்ளார்.

Related News

534

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery